ஜீ.வி.பிரகாஷின் ‘ஜெயில்’ திரைப்படத்துக்கு தடையா?

ஜிவி பிரகாஷ் நடித்த ‘ஜெயில்’ என்ற திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

‘ஜெயில்’ படத்தின் தயாரிப்பாளர் முதலில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திடம் வினியோக உரிமையை விற்பனை செய்துள்ளதாகவும் இந்த நிலையில் திடீரென விநியோக உரிமையை வேறு நிறுவனத்திற்கு மாற்றியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஜிவி பிரகாஷின் ‘ஜெயில்’ திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுகுறித்து பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் ‘ஜெயில்’ தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷின் ‘ஜெயில்’ திரைப்படம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே ரிலீசுக்கு தயாரானது என்பதும் தற்போது தான் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் நீதிமன்ற வழக்கு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment