Entertainment
ஜிவி பிரகாஷின் பிரெண்ட்ஷிப் ஆன்ந்தம்: எந்த படத்திற்காக தெரியுமா?
கடந்த சில ஆண்டுகளாக திரையுலக பிரபலங்கள் அவ்வபோது ‘ஆன்ந்தம்’ பாடலை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக சிம்பு ‘ஆன்ந்தம்’ பாடலை வெளியிடுவதில் பெரும் விருப்பம் உள்ளவர். இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் தான் நடித்து இசையமைத்து வரும் ஒரு படத்திற்காக ஆன்ந்தம் பாடலை கம்போஸ் செய்துள்ளார். அந்த பாடல் வெளியாகும் தேதியையும் அவர் அறிவித்துள்ளார்.
ஜிவி பிரகாஷ் நடித்து இசையமைத்து வரும் படங்களில் ஒன்றான ‘ஜெயில்’ படத்தினை பிரபல இயக்குனர் வசந்தபாலன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான காத்தோட காத்தானேன்’ என்ற பாடலை தனுஷ் பாடியுள்ளார். இந்த பாடல் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில்
‘ஜெயில்’ படத்தில் இடம்பெற்ற பிரெண்ட்ஷிப் ஆன்ந்தம் பாடலான ‘பத்து காசு’ என்று தொடங்கும் பாடல் ஆகஸ்ட் 18ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ராதிகா, ரோனிட் ராய், கவுதம் குலாட்டி, சுதன்ஷூ பாண்டே, யோகிபாபு, பிரகாஷ்ராஜ், சூரி, ரோபோ சங்கர், பாபிசிம்ஹா, பிரேம்ஜி அமரன், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படல் லாக்டவுன் முடிந்தவுடன் வெளியாகும்
