குருப்பெயர்ச்சி பலன்கள் – துலாம்- விருச்சிகம்

கும்ப குரு பெயர்ச்சி பலன்கள் 2021

ஜோதிட ஆசிரியர் வீரமுனிசுவாமிகள்

9629439499

ராஜபாளையம்

துலாம் ராசி:-

எப்போதும் நீதி நேர்மை நியாயம் என்ற கண்ணோட்டத்தில் தினசரி வாழ்க்கையை நடத்தும் துலாம் ராசி நேயர்களே!

உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி உங்கள் குலதெய்வத்தின் அருள் ஆசியை பெற்று தரப்போகும் போகிறது.

எனவே
இந்த குருப்பெயர்ச்சி காலம் முழுவதும் மாதம் தவறாமல் அம்மாவாசை திதி அன்று குலதெய்வம் கோயிலுக்கு சென்று படையலிட்டு பிரார்த்தனை செய்யுங்கள்.

இந்த குரு பெயர்ச்சியால் மிக அதிகமான அளவில் நன்மைகள் உங்களுக்கு கிடைக்க போகிறது.

பரிகாரம்:- இந்த ஆண்டில் உங்கள் குல தெய்வம் கோவிலை சீரமைக்க உங்களால் ஆன உதவிகள் ,பொருள் உதவி செய்து வரவும்.

அல்லது

உங்கள் ஊரில் அமைந்துள்ள கோவிலுக்கு கன்றுடன் கூடிய நாட்டு பசு ஒன்றை தானம் செய்யுங்கள்.அது கறவை நாடாக (பால் தரும் நாடாக) இருக்க வேண்டும்.

 

விருச்சிக ராசி

ஆராய்ச்சி மனப்பான்மையும் ஆழ்ந்த பாசமும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே! உங்களுக்கு ஏழரை சனி காலம் முடிந்து ஒரு வருடம் ஆகிறது.இருந்த போதிலும் இன்னும் நல்ல நேரம் வர வில்லை என்று இன்று வரை ஏக்கத்துடன் வாழ்ந்து வருகிறீர்கள்.

இந்த ஏக்கத்தை போக்கி உங்களுக்கு என்று ஒரு நிரந்தரமான வேலை அல்லது தொழிலை அமைக்க இருக்கிறது இந்த கும்ப குரு பெயர்ச்சி! ஆமாம்!! கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வந்த போராட்டமான வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது.

கும்ப குரு பெயர்ச்சி உங்களுடைய வாழ்க்கையில் வேலை மாற்றம் அல்லது இட மாற்றத்தை தந்துவிடும்.உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் உங்களை சரியாக புரிந்து கொண்டு மீண்டும் தேடி வர ஆரம்பிக்கும் காலம் இது.

பரிகாரம்:- வியாழக்கிழமை தோறும் உங்கள் ஊரில் அமைந்துள்ள ஜீவ சமாதி ஒன்றுக்கு செல்லுங்கள்.அங்கே உங்களால் ஆன உடல் உழைப்பை ஒரு மணி நேரம் தாருங்கள்

அல்லது

தினமும் ஒரு மணி நேரத்துக்கு பின்வரும் மந்திரத்தை ஜெபித்து அல்லது எழுதி வாருங்கள்.

ஓம் ஹ்ரீம் பம் அசிதாங்க பைரவாய நமக

இது குரு பகவானின் பிராண தேவதை யாக இருக்கும் அசிதாங்க பைரவரின் மந்திரம் ஆகும்.14.4.2022 வரை இப்படி செய்து வருவதால் உங்கள் வருமான வாய்ப்புகள் அதிகரிக்க துவங்கும்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print