குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-2022- தனுசு மகரம்

தனுசு ராசி

சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் தனுசு ராசி நேயர்களே!!!

கடந்த ஒரு ஆண்டாக உங்கள் ராசி அதிபதி நீச நிலையில் இருந்தார். நீச பங்கமாக இருந்தாலும் தங்களின் குழப்பமான ஒரு வருட வாழ்க்கை இந்த கும்ப குரு பெயர்ச்சி மூலமாக முடிவுக்கு வந்து விட்டது.

இனிமேல் வராத கடன் கள் வசூல் ஆக துவங்கும்.பள்ளி கல்லூரி மாணவர்கள் படிப்பில் தேர்ச்சி பெற்று உயர் நிலை கல்விக்கு செல்லுவார்கள் .

பலருக்கு மஹான்கள் தரிசனம் கிடைக்கும்.இந்த ஐந்து மாதங்களில் ஆரோக்கியமும் மன அமைதியும் அதிகரிக்கும்.குடும்பத்தில் இருந்து வந்த போராட்டமான சூழ்நிலை முடிவுக்கு வந்து விடும்.

பரிகாரம்

பிரதோஷ பூஜைக்கு இளநீர் வாங்கி தரவும்.மேலும் தினமும் சிவ புராணம் காலையில் வாசித்து விட்டு அன்றாட பணிகளை துவக்கலாம்..

மகர ராசி

உலக கோடீஸ்வரர்களில் 80 சதம் பேர்கள் மகர ராசி யினில் பிறந்தவர்கள்!

கடந்த ஓராண்டாக இருந்து வந்த விரக்தி மனப்பான்மை இந்த கும்ப குரு பெயர்ச்சி மூலமாக நீங்கி விடும்.பருவ வயதில் இருக்கும் மகர ராசி அன்பர்களுக்கு திருமண தடை நீங்கி வாழ்க்கை துணை அமையும்.

தொழில் அதிபர்களுக்கு தொழிலில் இது வரை இருந்து வந்த மந்த நிலை மாறிவிடும்.

பரிகாரம்

சனி பிரதோஷம் வரும் நாளன்று அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்

அல்லது

தினமும் 108 முறை பின்வரும் மந்திரத்தை ஜெபித்து அல்லது எழுதி வர வேண்டும்.

ஓம் ஹ்ரீம் பம் குரோதன பைரவாய நமக

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews