குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-2022 -கும்பம்- மீனம்

ஜோதிட ஆசிரியர் வீரமுனிசுவாமிகள்

9629439499

ராஜபாளையம்

 

கும்ப ராசி

கோபுர கலசம் போன்று உயர்ந்து நிற்கும் கும்ப ராசி அன்பர்களே! அதிகாரத்தில் உள்ள அனைவரையும் உங்கள் நண்பர்களாக கொண்டு இருப்பீர்கள்.

இந்த குரு பெயர்ச்சி மூலமாக உங்கள் வாக்குக்கு வலிமை உண்டாகும் .எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் அமைய துவங்கும்.

உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க ஆரம்பிக்கும்.தேர்தலில் வெற்றிக்கு இந்த குரு பெயர்ச்சி உதவியாக இருக்கும்.அரசு தேர்வுகள் எழுதி இருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள்.

பரிகாரம்:- தினமும் தெரு நாய்களுக்கு பிஸ்கட் பொறை தானம் செய்யலாம்

அல்லது

சனி கிழமை அன்று சிவ மந்திரம்(ஓம் ரீங் சிவ சிவ)/ பைரவ மந்திரம் (ஓம் ஹ்ரீம் பம் குரோதன பைரவாய நமக) ஜெபித்து கொண்டு வன்னி மரத்தை எட்டு முறை வலம் வர வேண்டும்.

மீனம் ராசி

எப்பேர்ப்பட்ட எதிரான சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் கொண்ட மீன ராசி அன்பர்களே!

சுப செலவுக்கு தயாராகுங்கள்.பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் மாணவிகளுக்கு புதிய பகுதி நேர படிப்புகளில் சேரும் வாய்ப்பு உண்டாகும்.

திருமணம் மற்றும் குழந்தை பாக்கிய யோகம் தரும் காலமாக இந்த கும்ப குரு பெயர்ச்சி உங்களுக்கு இருக்க போகிறது.

திடீர் அதிர்ஷ்டம் வரும் காலம் இப்போது உங்களுக்கு ஆரம்பமாகி உள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பலருக்கு கிடைக்கும் காலம் இது.

பரிகாரம்

அடுத்த ஒரு ஆண்டு வரை உங்கள் ஊரில் உள்ள பழைய கோவில்களுக்கு பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்கி தர வேண்டும்.

அல்லது

வறிய நிலையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து வாருங்கள்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print