குரு பார்க்கக் கோடி நன்மை…! குரு பெயர்ச்சியில் எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் யோகம் கைகூடுகிறது?

நம் வாழ்க்கைக்கு சுபிட்சம் தரக்கூடியவர் குரு பகவான். அதனால் தான் குரு பார்க்கக் கோடி நன்மை என்பார்கள். பொதுவாக குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சியைத் தான் முக்கியமாகப் பார்ப்பார்கள். நம்ம ராசிக்கு என்ன போட்டுருக்காங்க என அவசரம் அவசரமாக ஜோதிட புத்தகத்தைப் புரட்டுவாங்க. எல்லாமே நல்லதாகத் தான் போட்டுருப்பாங்க.

சில இடங்களில் பொதுவான விஷயங்களில் எச்சரிக்கை சொல்லியிருப்பார்கள். பொதுவாக வார்த்தைகளில் கவனம், வாகனம் ஓட்டுவதில் கவனம், உடல் நலனில் கவனம், வியாபாரத்தில் கவனம் என்பது எச்சரிக்கைகள்.

இவை இந்தப் பெயர்ச்சியில் மட்டுமல்லாமல் எப்போதுமே நமக்கு இருக்க வேண்டிய கவனங்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் நாம் ஒழுங்காக முறைப்படி செய்து வந்தால் பிரச்சனையே இருக்காது.

ஆலங்குடி குரு பெயர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தான் குருபெயர்ச்சி நேரத்தைக் கணக்கிடுகிறார்கள்.

Aalankudi Apatsahayeswarar
Aalankudi Apatsahayeswarar

அதன்படி, சித்திரை மாசம் 9ம் நாள் 22.4.2023 சனிக்கிழமை இரவு 11.27க்கு குரு ரேவதி நட்சத்திரம் 4ம் பாகம் மீனம் ராசியில் இருந்து அஸ்வினி நட்சத்திரம் 1ம் பாகம், மேஷத்திற்குப் பெயர்ச்சியாகிறார். இங்கு ஒரு வருடம் இருந்து குருபகவான் அருள்பாலிப்பார்.

மேஷம் என்பது செவ்வாயின் வீடு. சனிபகவான் தன் சொந்தவீடான கும்பத்தில் இருக்கிறார். செவ்வாய் என்பது நலம் மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட வீடு. இங்கு குரு வருகிறார். பொதுவாக ஸ்தானத்தை விட அவரது பார்வை தான் ரொம்ப முக்கியம்.

குருவின் 5 மற்றும் 9ம் பார்வை ரொம்ப விசேஷம். எல்லா கிரகத்திற்கும் ஏழாம் பார்வை உண்டு. 5ம் இடம் என்பது சிம்மத்திற்கு குரு பார்வை. 7ம் இடம் துலாத்திற்கு குரு பார்வை. தனுசு 9ம் வீடு.

கோச்சாரத்தில் 5ம் இடம் சிம்மம், 7ம் இடம் துலாம், 9ம் இடம் தனுசு இந்த ராசிக்காரர்கள் குருவால் மிக அதிகளவில் நன்மைகள் அடையப் போகிறார்கள். அதிகளவில் சுபகாரியங்களும் நடக்க வாய்ப்புள்ளது. அப்படியும் நடக்கவில்லை என்றால் குடும்ப ஜோதிடரிடம் சென்று என்ன தெசாபுத்தி நடக்கிறது என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

கடல் மாசு, மலை பகுதிகளில் பூகம்பம் ஏற்படக்கூடும். கடல், மலை சம்பந்தப்பட்ட இடங்களில் தாறுமாறாக வீடு கட்டியிருந்தால் இடித்துத் தள்ளும் நிலை ஏற்படும். விஞ்ஞானத்தில் பெரிய வளர்ச்சி, விவசாயத்தில் புரட்சி ஏற்படும்.

இயற்கை முறையில் விளைவிக்கக்கூடிய விளைபொருட்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கும். தெரியாதவர்கள் எல்லாம் விவசாயம் படிக்க ஆர்வம் காட்டுவார்கள். மாடித்தோட்டம் பிரபலமாகும். பெண்கள், மாணவ, மாணவிகள் அதிகளவில் ஈடுபாடு காட்டுவர்.

Tiruchendur
Tiruchendur

தங்கத்தில் அதிக முதலீடு செய்வர். ஷேர் மார்க்கெட்டில் கவனம் தேவை. கிரிப்டோ கரன்சி நிலை தடுமாறும். தீவிரவாத அச்சுறுத்தல்கள் எழலாம். யுத்தத்தில் இந்தியா ஜெயிக்க வாய்ப்புகள் உண்டு. திருச்செந்தூர் முருகனை வழிபடுவது நன்மை பயக்கும். அர்ச்சனை செய்வது மிகவும் நல்லது. ஆலங்குடி, திட்டை குருபகவானை வழிபடலாம்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.