கிரிக்கெட் வீரர் குணதிலகவுக்கு ஜாமீன் மறுப்பு!! சிட்னி நீதிமன்றம் அதிரடி!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது ஆஸ்திரேலியால் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

“10% இட ஒதுக்கீடு செல்லும்”- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

அதன் படி, பாதிக்கப்பட்ட இளம்பெண் இருவரும் டேட்டிங் ஆப் மூலமாக பல நாள்களாக பேசிவந்ததாகவும், நவ.2 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதன் காரணமாக சிட்னியில் உள்ள நியூ சவுத்வேல்ஸ் போலீசார் தனுஷ்க குணதிலகவை கைது செய்தனர். அதே சமயம் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு: எவ்வளவு தெரியுமா?

இந்த சூழலில் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு சிட்னி நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், தனுஷ்கவின் இத்தகைய செயலானது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment