Connect with us

வங்கக்கடலில் ‘குலாப்’ புயல்: கரையை கடப்பது எங்கே?

News

வங்கக்கடலில் ‘குலாப்’ புயல்: கரையை கடப்பது எங்கே?

76b38b67c678916d9470f17a858ad0f2

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உண்டாகி இருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இந்த காற்றழுத்த தாழ்வு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு உருவாகி இருப்பதாகவும் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் புயலாக உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வங்கக் கடலில் தோன்றும் இந்த புயலுக்கு குலாப் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது இந்த புயல் காரணமாக தமிழகம் ஆந்திரா ஒரிசா ஆகிய கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

குலாப் புயல் வரும் 26-ஆம் தேதி ஒடிசா மற்றும் ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள நாகை, பாம்பன் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது தகவல்கள் வெளிவந்துள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top