குஜராத்தில் டேங்கர் லாரியில் வாயு கசிந்து 6 பேர் பலி

குஜராத் மாநிலம் சூரத்தில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த எரிவாயு டேங்கர் லாரியில் இருந்து வாயு கசிந்துள்ளது.

வாயு கசிந்ததால் 6பேர் மூச்சுத்திணறி பலியாகினர்.

குஜராத் மாநிலத்தில் கிடங்கு ஒன்றில் வரிசையாக டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தது இந்த லாரிகள் எரிவாயு டேங்கர் லாரிகள் ஆகும்.

இந்த டேங்கர் லாரிகள் அனைத்தும் இரவு நேரத்தில் எரிவாவு நிரப்பபட்டு நிறுத்தப்பட்டிருந்த நேரத்தில் ஒரு லாரியில் இருந்து தொடர்ந்து எரிவாயு கசிந்து கொண்டிருந்தது அதனால் 6 பேர் பலியாகினர்.

பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment