இன்று வாக்கு எண்ணிக்கை.. குஜராத்தில் ஆட்சியை தக்க வைக்குமா பாஜக?

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1ம் மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடத்த நிலையில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம் என்றும் அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் சட்டப்பேரவை 182 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாகவும், இமாச்சல பிரதேச சட்டப் பேரவைக்கு 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்த நிலையில் இன்று இரண்டு மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்னும் சில நிமிடங்களில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் ஒரு சில நிமிடங்களில் முன்னிலை விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சியை மீண்டும் பிடிக்கும் என்று அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவித்த நிலையில் மீண்டும் ஆட்சியை பிடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகிய கட்சிகள் குஜராத்தில் தீவிர பிரச்சாரம் செய்த நிலையில் அந்த கட்சிகளுக்கு எந்த அளவுக்கு வாக்குகள் கிடைக்கும் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.