பாண்டியாவா-ராகுலா? முதலிடம் யாருக்கு? லக்னோ-குஜராத் பலப்பரீட்சை;

தற்போது நம் இந்தியாவில் மிகவும் விறுவிறுப்பாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் 10 அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த 10 அணிகளில் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் புதியதாக களமிறங்கியுள்ளது.

அதன்படி குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா மற்றும் லக்னோ அணியின் கேப்டனாக ராகுலும் உள்ளனர். இவர்கள் இருவரும் தங்களது அணியை மிகவும் சிறப்பாக வழி நடத்துவதாக தெரிகிறது.

ஏனென்றால் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் ராகுல் அணி லக்னோ, இரண்டாவது இடத்தில் பாண்டியா நீ குஜராத்தும் உள்ளது. இதனால் இந்த இரண்டு அணிகள் கண்டிப்பாக தகுதி சுற்றுக்கு நுழையும் என்று கிரிக்கெட் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது.

இந்த பலம்வாய்ந்த இரண்டு அணிகளும் இன்றைய தினம் மோதிக்கொள்வது குறிப்பிடத்தக்கது. அதன்படி இன்று இரவு 07:30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் அணி, லக்னோ அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியின் முடிவில் யார் முதலிடத்தில் வகிப்பார் என்றும் தெரியலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
ipl