குஜராத்தில் வெற்றி பெறுவது பாஜகவா? ஆம் ஆத்மியா? கருத்துக்கணிப்பு தகவல்!

குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டமாக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து உள்ளதை அடுத்து தற்போது கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்த தேர்தலில் பாஜகவுக்கு கடும் சவாலாக ஆம் ஆத்மி இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் ஆம் ஆத்மி ஒற்றை இலக்கங்களில் தான் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பு முடிவு வெளியாகி இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

gujarat election 2

 

குஜராத் மாநிலத்தில் பாஜக அமோக வெற்றி பெறும் என்றும் அதிகபட்சமாக 140 தொகுதிகளில் வெற்றிபெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இரண்டாவதாக காங்கிரஸ் கட்சியை 30 முதல் 50 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் ஆம் ஆத்மி கட்சி 6 முதல் 11 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.

சுயேட்சை மற்றும் மற்ற கட்சிகள் ஒன்று முதல் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றுவது என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது என்றும், ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் ஆட்சியை பிடிக்க வாய்ப்பே இல்லை என்றும் இந்த கருத்துக் கணிப்பில் இருந்து தெரியவந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.