குஜராத் பாலம் சரிந்து விபத்து: 120 பேர் பலி!

குஜராத் மாநிலம் மோர்பி தொங்கு பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கையானது அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் பழமையான தொங்குபாலம் ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பு புரனமைக்கப்பட்டு மக்கள் திறக்கப்பட்டு இருந்தது.

காதலி கொடுத்த விஷம்: மாணவர் மரணத்தில் திடீர் திருப்பம்!!

அதே சமயம் பண்டிகை நாட்கள் என்பதால் மக்கள் அதிகளவில் கூடியதாக தெரிகிறது. குறிப்பாக கிட்டத்தட்ட 500 பேர் தொங்கு பாலத்தில் நின்றதால் பாரம் தாங்க முடியாமல் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 120 பேர் பலியானதாக கூறப்படுகிறது. அதோடு 177 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், இதில் 19 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கவனமா இருங்க! இன்று 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..!!!

மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியானது தொடர்ந்து நடைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment