ஆர்சிபி அணிக்கு ஆப்பு வைத்த குஜராத்.. மும்பைக்கு பிளே ஆப் வாய்ப்பு..!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் பெங்களூர் அணி தோல்வி அடைந்ததால் அந்த அணி பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான விராட் கோலி மிக அபாரமாக விளையாடி 101 ரன்கள் அடித்தார். ஆனால் அவரை தவிர அந்த அணியில் இருந்த யாரும் பொறுப்பாக விளையாடவில்லை. குறிப்பாக தினேஷ் கார்த்திக் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து 198 என்ற இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணியின் சுப்மன் கில் மிக அபாரமாக விளையாடி 104 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் விஜய் சங்கர் 53 ரன்கள் அடித்து தனது அணியின் வெற்றிக்கு உதவினார். இதனை அடுத்து குஜராத் அணி 198 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றுயின் மூலம் குஜராத் புள்ளி பட்டியல் 20 புள்ளிகள் உடன் முதல் இடத்தை தக்கவைத்து கொண்டது.

கோலிஆனால் தோல்வி அடைந்த பெங்களூர் அணி 14 புள்ளிகள் மட்டுமே எடுத்ததால் 16 புள்ளிகள் எடுத்த மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று நடந்த 69வது போட்டியில் 201 ரன்கள் என்ற ஹைதராபாத் கொடுத்த இலக்கை மும்பை 18 ஓவர்களில் எட்டி வெற்றி பெற்றதை அடுத்து அந்த அணி பிளே ஆப் தகுதி பெற்றுள்ளது.

இந்த நிலையில் தற்போது நாளை முதல் குவாலிஃபையர் போட்டி சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளன. நாளை நான் மறுநாள் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன. நாளைய போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். நாளை மறுநாள் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி, குவாலிஃபையர் 1 போட்டியில் தோல்வி அடைந்த அணியுடன் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...