Connect with us

பள்ளிகள் திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு: செப்.1ல் திறக்கப்படுகிறதா?

Tamil Nadu

பள்ளிகள் திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு: செப்.1ல் திறக்கப்படுகிறதா?

a0d2b713cd264c3c68cce6e8a30984f1

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அனேகமாக செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 

இந்த நிலையில் சற்று முன் தமிழக அரசு பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது, இந்த நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:

* 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

* 50% மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெற வேண்டும் என அறிவுறுத்தல் 

* மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம்

* அனைத்து வகுப்பறைகளிலும் சானிடைசர், சோப் கலந்த நீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் 

* நோய் அறிகுறிகள் உள்ள மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை

*வைட்டமின் மாத்திரைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்

* ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் 

* மாணவர்களுக்கு அறிகுறி இருந்தால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top