
Tamil Nadu
12-ம் வகுப்பு முடித்த பழங்குடியின மாணவர்களுக்கு வழிகாட்ட குழு அமைப்பு.!!
தற்போது நம் தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதிக்கொண்டு தேர்வு முடிவுக்காக காத்துக் கொண்டுள்ளனர். இதில் பல மாணவ மாணவிகள் தங்களது கல்லூரி படிப்பினை தேர்வு செய்ய பலரிடமும் தீர ஆராய்ந்து முடிவெடுக்க காத்துக் கொண்டுள்ளனர்.
மேலும் அவர்கள் பல வழிகாட்டு குழுக்கள் மூலமாகவும் தங்களது வாழ்க்கைக்கு தேவையான சரியான படிப்பினை தேர்வு செய்து கொள்கிறார்கள். இந்த நிலையில் பழங்குடியின மாணவர்களும் இது போன்று கல்லூரி படிப்பை தேர்வு செய்ய வழிகாட்டு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி பழங்குடியின மாணவர்கள் கல்லூரி இடைநிற்றலை தவிர்க்க ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கயல்விழி கூறியுள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு செல்லும் பழங்குடியின மாணவர்களுக்கு வழிகாட்ட குழு செயல்படும் என்று அமைச்சர் கயல்விழி கூறினார்.
இந்தக் குழுவின் மூலம் அவர்களின் கல்லூரி இடைநிற்றல் தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
