கீர்த்தி சுரேஷ் அணிந்திருக்கும் இந்த ஜிகுஜிகு உடையின் விலை என்ன தெரியுமா?
பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் அணிந்திருக்க கூடிய, இந்த டிரஸின் விலை பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். சினிமாவிற்கு வந்த புதிதில் அவAரது உடல் எடை மற்றும் நடன அசைவுகள் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டது. இதனையடுத்து கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்து அநியாயத்திற்கு ஒல்லி பெல்லி லுக்கிற்கு மாறினார்.
இப்போது சிக்கென இருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது சோசியல் மீடியாவில் தினமும் விதவிதமாக போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார். நியூ பேஷன் மற்றும் ட்ரெண்டிங் உடைக்காக கீர்த்தி சுரேஷை பாலோப் செய்யும் இளம் பெண்கள் ஏராளம்.
தற்போது எத்தினிங் ஸ்டைலில், லைட் மஞ்சள் நிறத்தில் ஜிகு ஜிகு வேலைப்பாடுகள் நிறைந்த குட்டையான கலிதார் குர்தா சல்வாரில் கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ள போட்டோஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.
அர்ச்சனா மேத்வால் என்ற பிரபல உடை வடிவமைப்பாளர் டிசைன் செய்த டிரஸுடன் அம்ரபாலி ஜூவல்லரி மற்றும் அசத்தலான ஜும்காக்களுடன் அழகு தேவதையாய் ஜொலித்து வருகிறார். இந்த டிரஸின் விலை பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த டிரஸின் விலை ரூ.52 ஆயிரம் ஆகும். கடந்த சில நாட்களாகவே திரைப்பிரபலங்களின் விலை உயர்ந்த ஆடைகள் பற்றிய விவரங்கள் மற்றும் விமர்சனங்கள் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
