Connect with us

குடோன் சுவர் இடிந்து விழுந்து விபத்து: உடல் நசுங்கி 4 பேர் பலி!

கொலை

செய்திகள்

குடோன் சுவர் இடிந்து விழுந்து விபத்து: உடல் நசுங்கி 4 பேர் பலி!

டெல்லி அலிபூரில் குடோன் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்தில் 4பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியின் புறநகர் பகுதியில் அலிபூர் என்ற இடத்தில் குடோன் ஒன்று இருந்து வந்ததாக கூறப்படுகிறது .இந்நிலையில் அந்த குடோனில் 20 பேர் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் குடோனின் சுவர் எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் குடோனில் பணியாற்றிய 20 பேர் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்திருப்பதாக டெல்லி தீயணைப்புத்துறையினர் அதிகாரபூர்வமாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதோடு 10 நபர்கள் மீட்கப்பட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top