Connect with us

சாலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒன்றிய அரசு; குடியாத்தம் புறவழிச்சாலை- ரூபாய் 221 கோடி ஒதுக்கீடு!

NH 75 scaled

செய்திகள்

சாலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒன்றிய அரசு; குடியாத்தம் புறவழிச்சாலை- ரூபாய் 221 கோடி ஒதுக்கீடு!

சாலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒன்றிய அரசு; குடியாத்தம் புறவழிச்சாலை- ரூபாய் 221 கோடி ஒதுக்கீடு!

இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையோடு காணப்படுவதற்கு பெரும் உதவியாக அமைவது நெடுஞ்சாலைகள் தான். ஏனென்றால் ஒவ்வொரு மாநிலத்தின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் பல மாநிலத்தில் இடையே உறவை வலுப்படுத்துகிறது.

இதற்காக ஒன்றிய அரசு மும்முரமாக சாலை மேம்பாட்டு தொகையை ஒதுக்கீடு செய்கின்றன. நெடுஞ்சாலை மட்டுமின்றி புறவழிச் சாலைகளிலும் ஒன்றிய அரசு கவனமாக கையாண்டு கொண்டு தான் வருகிறது. அந்த வரிசையில் குடியத்தம் புறவழிச்சாலை அமைக்க ரூபாய் 221 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி குடியாத்தம் நகரில் புறவழி சாலை அமைக்க ஒன்றிய அரசு ரூபாய் 221.03 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ரூபாய் 221.03 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஒன்றிய அரசின் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தகவல் அளித்துள்ளார்.

குடியநத்தம் நகரை சுற்றி ஒன்பது கிலோ மீட்டர் தொலைவுக்கு புறவழி சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த திட்டம் உள்ளதாகவும் ஒன்றிய அரசு தரப்பில் இருந்து கூறப்படுகிறது.புதிதாக அமைக்கப்படும் புறவழி சாலை குடியாத்தம் நகரை மங்களூரு- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை உடன் இணைக்கும். குடியாத்தம் புறவழி சாலை-தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் புதிய சாலைக்கு NH 75 என பெயரிடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top