புத்தாண்டு முதல் ஜிஎஸ்டி உயர்வு! : நெசவாளர்கள், முதலீட்டாளர்கள் கவலை

புடவை என்றாலே பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதுவும் பட்டுப்புடவை என்றால் அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தற்பொழுது பட்டுப்புடவைகளின் விலை நடுத்தர மக்களும் வாங்கும் நிலையில் உள்ளது.

புத்தாண்டு முதல் பட்டுச்சேலை மற்றும் அதனை தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயரும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் கைத்தறி சங்கங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மிகவும்கவலை அ டைந்துள்ளனர்.

மூலப்பொருட்களின் ஜிஎஸ்டி உயர்வினால் பட்டுப்புடவைகளின் விலை கணிசமாக உயரும் என தெரிகிறது. அதாவது சாதாரண பட்டுச் சேலையின் விலை ரூ.3,௦௦௦ வரை உயரும். இதனால் பட்டு மற்றும் பருத்தி ஆடைகளை நெய்யும் நெசவாளர்கள் பாதிக்கப்படுவர் என கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் குரல் எழுப்பி வருகிறது.

பட்டு மட்டும் பயன்படுத்தி ஜரிகை இல்லாமல்உற்பத்தி செய்யும் சேலையை ரூ.10 ஆயிரத்துக்கு குறைவாக விற்கவே முடியாது. விவசாயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போல நெசவாளர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஜிஎஸ்டி உயர்வை தடுக்க வேண்டும் என்று நெசவாளர்கள் கூறினர்.

கையால் நெய்யும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி யிலிருந்து விலக்கு உள்ளது. அதனால் கைத்தறியில் நெய்யப்படும் பட்டுச் சேலைகளுக்கும்  ஜிஎஸ்டி யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பட்டுச் சேலை உற்பத்தியாளர்கள் மற்றும் நெசவாளர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் சமீபத்தில் சென்னை வந்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது கைத்தறி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment