மக்களும் வளர வேண்டும்! தொழில் நிறுவனங்களும் வளர வேண்டும்! அரசும் வளர வேண்டும்!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வங்கி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுகிறார். ஆரம்பத்தில் இது மாநில வளர்ச்சிக்கும் மக்களுக்கும் இடையே ஒரு கூட்டுறவு வளர்ச்சியாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று உரை நிகழ்த்த தொடங்கினார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.ஸ்டாலின்

அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் வங்கிகள் முக்கிய இடத்தில் உள்ளன என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறினார். கொரோனாவிலிருந்து மீண்டு வரக்கூடிய இந்த காலகட்டத்தில் உங்களுடைய பங்களிப்பு மிகமிக முக்கியமானக அமைந்துள்ளது என்று கூறினார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

தற்போது மாநிலத்தின் முக்கியமான துறைகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்கவும், பொருளாதாரம் புத்துயிர் பெறவும், தொற்று நோய்களின் போது இன்னல் அனுபவித்த பல குடும்பங்கள்  மாற்றவும் கூடிய முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் என்று வங்கித் துறை ஊழியர்கள் மத்தியில் பேசினார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட வங்கிகளை ஊக்குவிப்பது குறித்து ஆலோசனை  என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறினார். இந்த கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர், தலைமைச் செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அரசு பல முக்கிய நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

இது மாநில அரசு மட்டுமல்லாமல் மக்கள் உடல் வளர்ச்சிக்கும் குறிப்பாக சமூகத்தில் ஏழை மற்றும் நலிந்த பிரிவினர் வாழ்க்கை வாழ்வாதாரத்தை மேம்படுத்த உள்ளது. மக்களும் வளர வேண்டும் தொழில் நிறுவனங்களும் வளர வேண்டும் மாநிலமும் வளர வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உரையில் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment