என்னது!! தாவரங்களாக வளரும் திருமண அழைப்பிதழா?
தன்னுடைய திருமண அழைப்பிதழை தாவரங்களாக வளரும் விதத்தில் புதுமையான முறையில் அச்சடித்துள்ள அதிகாரியின் செயல் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
தெலுங்கானா மாநிலம் ஷார்த் நகரை சேர்ந்தவர் சசிகான் ஹொத்ராவத். இரயில்வே அதிகாரியான இவர் தன்னுடைய திருமணத்தை புதுமையான முறையில் நடத்த விரும்பினார்.
அதன் ஒருபகுதியாக திருமணத்தன்று குறைந்த அளவில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது என்றும் குறைந்த செலவில் அச்சடித்து அதன் மூலம் சுற்று சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று விரும்பினார்.
அவரின் யோசனைக்கு வருங்கால மனைவியும் சம்மதித்தார். அதன் அடிப்படையில் மூன்று வகை பூச்செடிகளின் விதைகளும், மூன்று வகை காய்கனிகளின் விதைகளும் திருமண அழைப்பிதழில் இடம்பெரும் வகையில் வித்தியாசமான முறையில் அச்சடித்தார்.
இந்த அழைப்பிதழை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பார்த்து வியந்து மணப்பூர்வமாக மணமக்களை வாழ்த்தினர். பொதுவாக விருந்தினர்கள் அனைவரும் திருமணம் நடைப்பெற்றவுடன் அழைப்பிதழை அலட்ச்சியமாக விட்டுவிடுவர்.
அதனை குப்பையிலோ, தெருவிலோ வீசி விடுவர். இனி அப்படி செய்தாலும் நன்மை தரும் செயலாக அமைந்துவிடும் என்பதில் அய்யம்மில்லை. அதேசமயம் அழைப்பிதழில் 6 வகையாக தாவிர விதைகள் உள்ளதால் அதனை பத்திரப்படுத்தி கொள்வது நிதர்சனம்.
