அசுரவேகத்தில் முடி வளர வேண்டுமா… இதை மட்டும் ட்ரை பண்ணுக …

பெண்களுக்கு முடி தான் எப்போதும் அழகு. பெண்களுக்கு முடி வளர்ச்சி அதிகரித்து காடு போல அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும் என்று இப்பதிவில் பார்க்கலாம்.

இன்றைய நாளில் கொளுத்தும் வெயில் மாசடைந்த காற்று மற்றும் மாறிப்போன உணவு பழக்கங்களால் கூந்தல் பாழாகி போகிறது. இதனை சரி செய்ய நாம் கண்ட கண்ட கெமிக்கல் கலந்த பியூட்டி ப்ராடக்ட்ஸ் பயன்படுத்துகிறோம்.

அதுமட்டுமல்லாமல் பார்லரில் கண்ட ட்ரீட்மென்ட் செய்ய நம் காசை வீணாக்குகிறோம். இனி இது போல பயன்படுத்தாமல் நம் வீடுகளில் அன்றாட பயன்படுத்தும் சில பொருட்களை கொண்டு நமது முஐடியை பராமரிக்க வேண்டும்.

அவை என்னவென்றால் பாசிப்பருப்பு ஒரு கப், 2 முட்டை தயிர் எடுத்து கொள்ளவும்.பாசிப்பருப்பை முந்தைய தினம் ஊறவைத்து இரவே ஒரு ஈரமான துணியில் போட்டு காற்று போகாத அளவிற்கு கட்டி வைக்க வேண்டும். காலையில் அது முளை கட்டி இருக்கும் இதனை மிக்ஸியில் போட்டு தயிரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அரைத்த பேஸ்டுடன் முட்டையை கலந்து வாரத்தில் ஒருமுறை தலை குளிப்பதற்கு முன் தலையில் எண்ணெய் தேய்த்து பின்னர் அரைத்த இந்த கலவையை தலை முடியில் தொடக்கத்திலிருந்து அடிமுட்டி வரை தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து தலை குளிக்கவும் .

பாதாம் பருப்பை தோலோடு சாப்பிட்டால் என்னவாகும் தெரியுமா?

தொடர்ந்து இதை 30 நாட்களில் முடி அசுர வேகத்தில் வளர்வதை கண்கூடாக பார்க்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதனை வாரம் ஒருமுறை தவறாமல் இதனை பயன்படுத்தி வந்தால் முடி அழகாக இருப்பது மட்டுமல்லாமல் நன்கு வளரவும் ஆரம்பிக்கும்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.