
Tamil Nadu
ஆன்லைன் சூதாட்டத்தை ஆராய குழு-நிபந்தனைகளுடன் அரசாணை!!!!
நம் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக நான்கு நாட்களுக்கு முன்பு ஆயுதப்படை காவலர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டிருந்தார்.
இதன் எதிரொலியாக நேற்றைய தினம் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதன்படி ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விசாரணை செய்த ஆய்வு குழு ஒன்று அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இந்த குழுவின் தலைவராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டம் குழுவுக்கு சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆன்லைன் சூதாட்டம் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவுக்கான அரசாணையில் சில முக்கிய அறிவிப்புகள் கூறப்பட்டுள்ளது.
அதில் ஆன்லைன் விளையாட்டுகள் உண்மையிலேயே திறன்களை வளர்க்கிறதா? என்பது குறித்து ஆராய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டு தொடர்பான விளம்பரங்களை தடை செய்வது குறித்து முழு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகள் அடிமையாக்குகிறதா? நிதி இழப்பு ஏற்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்வது குறித்து ஆராய குழுவுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
