Connect with us

குரூப் 5ஏ தேர்வு: TNPSC அறிவிப்பாணை வெளியீடு!!

TNPSC Group 5 Notification 16612373013x2 1

தமிழகம்

குரூப் 5ஏ தேர்வு: TNPSC அறிவிப்பாணை வெளியீடு!!

குரூப்-5 தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்து அடுத்தடுத்த அப்டேட்கள் வருகிறது. அந்த வகையில் தற்போது குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன் படி, தலைமை செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 இடங்களை நிரப்ப இன்று முதல் வருகின்ற செம்டம்பர் 21-ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க ரூ.150 செலுத்த வேண்டும் என்றும் குற்றவியல் வழக்குகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் தகவல்களைத் தேர்வாணையத்திற்கு இணைய வழி விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்   கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top