குரூப் 4 தேர்வு அட்டவணை எப்போது ? டிஎன்பிஎஸ்சி தலைவர் வெளியிட்ட நியூ அப்டேட்!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனாவின் தாக்கம் படிபடியாக குறைந்து வருவதால் இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர்  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

தமிழகத்தில் குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டம் தயாரிப்பு பணி இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுபெற இருப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து மார்ச் மாதத்தின் மத்தியில் குரூப் 4 தேர்வுக்கான அட்டவணையை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்.

குரூப்- 4 காலிப்பணியிடம் 5000 இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கலந்தாய்வு முடிவு பெறும் வரை காலிப் பணியிடங்களை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி மீது தேர்வர்களுக்கு நம்பகத் தன்மை அதிகரித்துள்ளதாக கூறினார்.

மேலும், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு வினா மற்றும் விடைத்தாள்கள் கொண்டு செல்லும் வாகனங்களில் கேமராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் வெளியாக வாய்ப்பில்லை என கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment