குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள்… டிஎன்பிஎஸ்சி நியூ அப்டேட்..!!!

தமிழகத்தில் நடப்பாண்டில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைப்பெறும் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்திருந்தது. அதன் படி, மே மாதம் குரூப் 2 மற்றும் ஜூலை மாதம் குரூப் 4 தேர்வுகள் நடைப்பெற்றது.

இந்நிலையில் மகளிருக்கான 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என தீர்ப்பளித்தால், டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகுவதில் காலதாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் இம்மாத இறுதியில் குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், முதலில் எந்த தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.

மேலும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, கலந்தாய்வு நடைபெற்ற பிறகு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment