குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவு எப்போது? -TNPSC நியூ அப்டேட்!!

தமிழகத்தில் குரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக டின்பிஎஸ்சி தேர்வுகள் நடைப்பெறாமல் இருந்து வந்தது. இந்த சூழலில் தொற்று பரவல் தற்போது குறைந்துள்ளதால் குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைப்பெற்று இருந்தது.

இந்நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற கேள்வி தேர்வர்கள் மத்தியில் இருந்து வந்தது. இதற்கிடையில் டின்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் குறித்து அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதன் படி, குரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

மேலும், தேர்வு முடிவு குறித்த தேதிகளை டின்பிஎஸ்சி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுவது  குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.