குரூப் 2 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி முக்கிய அறிவிப்பு!!

குரூப் 2 தேர்வு முடிவுகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசில் பல்வேறு துறைகளில் 5500 காலி பணியிடங்கள் நிரம்புவதற்கு கடந்த மே மாதம் 21-ம் தேதி போட்டித்தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தியது. இந்த தேர்வில் கிட்டத்தட்ட 9 லட்சத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் எழுதியிருந்தனர்.

கொடநாடு வழக்கு! விசாரணை அதிகாரி நியமனம்..!!

இதற்கிடையில் தேர்வு முடிவுகள் 5 மாதங்கள் ஆன நிலையில் இதுவரையில் வெளியிடப்படாமல் இருந்தது தேர்வர்கள் மத்தியில் குழப்பத்தை கிளப்பியுள்ளது.

அதே சமயம் சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகள் உலா வருகின்றனர். அதன் படி, விடைத்தாள்கள் தண்ணீரில் நனைந்ததால் ஸ்கேன் செய்வதில் சிக்கல் இருப்பதாக கூறப்பட்டது.

சத்யா கொலை வழக்கு! காதலன் சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்..!!

அதே போன்று விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யும் இயந்திரம் பழுதடைந்தன் காரணமாக விடைத்தாள்கள் குறிப்பிட்ட காலத்தில் மதிப்பீடு செய்ய முடியாத ஏற்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் கசிய தொடங்கியது.

இந்த சூழலில் பெண்கள் இட ஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் பணிகள் நடைப்பெற்று வருவதால் சமூக வலைதளங்களில் பரவும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment