குரூப் 1 தேர்வின் தரவரிசை பட்டியல் வெளியீடு!! ஜூலை 29ஆம் தேதி கலந்தாய்வு;

கடந்த சில மாதங்களாக டிஎன்பிஎஸ்சி தரப்பிலிருந்து அடுத்தடுத்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வானது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற முடிந்தது.

இருப்பினும் அந்தத் தேர்வின் முடிவுக்காக எழுதியவர்கள் காத்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தமிழகமெங்கும் நடைபெற உள்ளது.

இவ்வாறு அடுத்தடுத்த அப்டேட்களை கொடுக்கும் டிஎன்பிஎஸ்சி தற்போது குரூப்-1 தேர்வின் தரவரிசையில் பட்டியலை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான தரவரிசை பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

66 பணியிடங்களுக்கான நேர்காணல் முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில் தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்படித்தோர் ஜூலை 29ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment