அடித்து பெய்த கனமழையால் அடுத்தடுத்து உடைந்து ஓடும் தரைப்பாலங்கள்!

நம் தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் பல சாலைகள், தெருக்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கின. குறிப்பாக தரைப்பாலம் ஒரு சில பகுதிகளில் இந்த மழை நீரால் அடித்து செல்லப்பட்டு காணப்பட்டது.

தரை பாலங்கள்

இதுகுறித்து தற்போது மழை நீரில் அடித்து  செல்லப்பட்ட தரை பாலங்கள் பற்றிய விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் வரிசையில் முதலாவதாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அருகே மாதனூர்-  உள்ளி இடையே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.இதனால் அங்குள்ள கிராம மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஏனாதிமங்கலம் அருகே மாரங்கியூரில் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. மாரங்கியூரில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் 4 கிராம மக்கள் சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் ஏனாதி மங்கலத்தில் மதகுகளும் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஏனாதிமங்கலம்  தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ளது. ஏனாதி மங்கலத்தில்  உள்ள தடுப்பணையில் இரண்டு மதகுகளும் உடைந்ததாக கூறப்படுகிறது. என இரண்டு மதகுகள் உடைந்து தண்ணீர் வெளியேறுவதால் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment