News
மணமேடையில் உட்கார்ந்து லேப்டாப்பில் வேலை செய்யும் மணமகன்: வைரல் வீடியோ!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது பல நிறுவனங்களில் வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற நடைமுறை அமலில் இருந்து வருகிறது என்பதும் இதனால் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தான் வேலை செய்ய வேண்டும் என்பது இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் பணியை செய்து கொள்ளலாம் என்ற நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் காரில் செல்லும் போதும், பேருந்தில் செல்லும் போதும் லேப்டாப்பில் பணி செய்து கொண்டிருக்கும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் திருமணம் செய்யும் மணமகன் ஒருவர் மணமேடையில் உட்கார்ந்து கொண்டு இருக்கும்போதும் தனது நிறுவனத்திற்காக லேப்டாப்பில் பணி செய்து கொண்டிருக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது
மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த திருமணம் ஒன்றின்போது மணமேடையில் உட்கார்ந்திருக்கும் மணமகன் லேப்டாப்பை எடுத்து வந்து பொறுப்பாக பணி செய்து கொண்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இதனை மணமகன் மணமகள் வீட்டார் மற்றும் திருமணத்திற்கு வந்தவர்கள் ஆச்சரியமாக பார்த்து உள்ளனர்
கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா மணமேடையில் கூட பொறுப்பாக வேலை செய்ய வேண்டுமா என்ற கமெண்ட்ஸ்கள் இந்த வீடியோவுக்கு பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
