Connect with us

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புதுமாப்பிள்ளை போக்சோ-வில் கைது

child harassment

தமிழகம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புதுமாப்பிள்ளை போக்சோ-வில் கைது

திருமண ஆசைக் காட்டி சிறுமியை பலாத்காரம்   திருமணம் செய்து கொண்ட  புதுமாப்பிள்ளையை  போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை அருகே அகரசென்னியநல்லூர் கன்னியம்மன்கோயில் தெருவை சேர்ந்த  மோகன்தாஸ் (23) என்பவர் சிறுமியை திருமணம் செய்யப்போவதாக குழந்தைகள் நல விரிவாக்க அலுவலர் மணிமொழிக்கு கிடைத்த தகவலின்பேரில் அகர சென்னியநல்லூர் சென்றபோது அங்கே புதுமணத்தம்பதி சகிதமாக மோகன்தாசும் அந்த சிறுமியும் காட்சி தந்தனர், இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

தெரிந்துகொண்ட அதிகாரி  பெண்ணின் வயதுசான்றிதழை  வரவழைத்து ஆய்வு செய்தபோது அவர் சிறுமி என்பது தெரியவந்தது. மேலும் மோகன்தாஸ் திருமண ஆசைக் காட்டிசிறுமியை   தனிமையில் இருந்ததும் தெரியவந்தது.

இது குறித்து குழந்தைகள் நல விரிவாக்க அலுவலர் மணிமொழி மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில்  புகார் செய்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் மோகன்தாஸ்மீது போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமண தடைச்சட்டப்படி  வழக்கு பதிவு செய்து மோகன்தாசை கைது சிறையில் அடைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top