திருப்பூர் பெண்மணிக்கு புகழாரம்….! லஞ்சம், ஊழல் ஒரு கரையான்-மோடி;
நம் இந்தியாவில் பரபரப்பான தகவல்கள் தினந்தோறும் அரங்கேறிக் கொண்டே வரும். அந்தப்படி திருப்பூரை சேர்ந்த பெண்மணிக்கு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளது இந்தியா எங்கும் காட்டுத்தீ போல பரவி கொண்டு வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டையில் இளநீர் விற்கும் தாயம்மாள் என்பவருக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
பொருளாதார நிலை சரியில்லாத போதும் தாயம்மாள் தனது கல்வி விஷயத்தில் எதையும் விட்டுக் கொடுக்கவில்லை என்று மோடி கூறினார். அதன்படி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வசிக்கும் தாயம்மாள் தனது சொந்த நிலம் வீடு இல்லாமல் பல ஆண்டுகளாக குடும்ப வாழ்வு வருகிறது.
அவரது பிள்ளைகள் சின்னவீரம்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலை பள்ளியில் படித்து வருகின்றனர். அந்த பள்ளியின் உள்கட்டமைப்பு பணி மேற்கொள்ள தான் இளநீர் விற்றதன் மூலம் கிடைத்த ஒரு லட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்து உள்ளார்.
இதனால் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி உட்கட்டமைப்புக்கு தாயம்மாள் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தார் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
லடாக்கில் திறந்தவெளி செயற்கை தடகள மைதானம், கால்பந்தாட்ட மைதானம் அமைக்கப்பட உள்ளது என்றும் மோடி கூறினார். லஞ்சம், ஊழல் என்பது கரையான் போன்றவை. நாட்டையே அழிக்கக் கூடியது என்றும் பிரதமர் மோடி கூறினார். நாம் நமது பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்தால் நிச்சயமாக லஞ்சம் ஊழல் இருக்காது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
