அப்பல்லோ ஊழியர்களுக்கு மட்டும் தான் வாழ்த்தா? எங்களுக்கு எல்லாம் கிடையாதா தலைவா?

ec344e931638170f82625d380d6ab30c

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அப்பல்லோ மருத்துவர்கள் ஊழியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில் தான் மிகவும் நலமாக இருப்பதாகவும் தனது உடல்நிலை மற்றும் மனநிலையை நன்றாக இருப்பதாகவும் தன்னை நன்றாக கவனித்துக் கொண்ட அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றிகள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று அந்த வீடியோவில் ரஜினிகாந்த் கூறியுள்ளார் 

35571febdb4c5265d611dac87c013c3b

ரஜினிகாந்தின் புத்தாண்டு வாழ்த்து குறித்த டுவீட் அல்லது வீடியோ அவருடைய டுவிட்டர் பக்கத்தில் வெளிவரும் என்று இன்று காலையில் இருந்தே ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அப்பல்லோ மருத்துவமனை ஊழியர்களுக்கு மட்டும் தனியாக அவர் வாழ்த்து சொல்லி இருப்பது ரஜினி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது 

இதனையடுத்து அப்பல்லோ மருத்துவமனை ஊழியர்களுக்கு மட்டும் தான் புத்தாண்டு வாழ்த்தா? எங்களுக்கு கிடையாதா? என்று ரஜினி ரசிகர்கள் டுவிட்டரில் புலம்பி வருவதை பார்க்க முடிகிறது

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.