பிரபல ஓடிடி தளத்துடன் கூட்டணி அமைத்த பிரம்மாண்ட இயக்குனர்….. இதுதான் விஷயமாம்…!

தமிழ் சினிமாவில் இந்தியன், அந்நியன், ஜென்டில்மேன் என பல வெற்றி படங்களை வழங்கி பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்றவர் தான் இயக்குனர் சங்கர். இவரது படங்கள் பெரும்பாலும் அதிக பட்ஜெட் கொண்ட படங்களாகவே இருக்கும். அந்த வகையில் எந்திரன், ஐ போன்ற படங்கள் அதற்கு ஒரு உதாரணம்.

shankar

கமல் மற்றும் சங்கர் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இயக்குனர் சங்கர் ஈடுபட்ட போது ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் தற்போது சங்கர் அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக்கை ரன்வீர் சிங்கை வைத்து இயக்க உள்ளார்.

இதற்கிடையில் தற்போது ராம்சரண் நடிக்கும் பெயரிடப்படாத தெலுங்கு படத்தை சங்கர் இயக்கி கொண்டிருக்கிறார். இப்படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார்.

இந்நிலையில் இயக்குனர் சங்கர் தனது தயாரிப்பு நிறுவனமான எஸ் பிக்சர்ஸ் மூலம் பிரபல ஒடிடி தளமான அமேசான் பிரைம் வழியாக புதிய வெப் சீரிஸை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த வெப் தொடருக்காக இறைவி, NGK, இறுதிச்சுற்று, கோலமாவு கோகிலா படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சிவகுமார் விஜயன் ஒப்பந்தமாகி உள்ளாராம்.

இதுதவிர ஜனவரி 6 முதல் அதாவது இன்று முதல் இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபகாலமாக படங்களைவிட வெப் தொடர்கள் தான் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அதனால் நடிகர்களும் சரி இயக்குனர்களும் சரி வெப் தொடரில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். தற்போது அந்த வரிசையில் இயக்குனர் சங்கரும் இணைந்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment