
பொழுதுபோக்கு
ஹாலிவுட் படத்தில் கலக்கும் தனுஷ்!! வைரலாகும் தி கிரே மேன் படத்தின் மாஸ் வீடியோ;;
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் தனுஷ் . இவர் தற்போது நானே வருவேன், திருச்சிற்றம்பலம் , வாத்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தி கிரே மேன்’ படத்தினை அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் ‘தி கிரே மேன்’ படத்தை இயக்கியுள்ளனர்.
இதனிடையே கடந்த 2009-ல் வெளியான ‘தி கிரே மேன்’ என்ற நாவலை தழுவி இப்படம் பிரமாண்ட பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தற்போது தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் தனுஷின் கதாபாத்திரமான அவிக் சான் சிறப்பு காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
குறிப்பாக ரூஸோ சகோதரர்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வாயிலாக வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Ladies and gentlemen, we give you…@dhanushkraja #TheGrayMan pic.twitter.com/abPLFxHq6B
— Russo Brothers (@Russo_Brothers) July 12, 2022
