திருக்கோயில் பணியாளர்களுக்கு ரூ.3,000 – முதல்வர் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் திருக்கோயில் பணியாளர்களுக்கான அகவிலைப்படி மற்றும் பொங்கல் கருணைக்கொடை உயர்த்தப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திருக்கோயில்களை பராமரிக்கவும், கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு லட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருவாய் ஈட்டும் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி திருக்கோயில் பணியாளர்களுக்கு 01.01.2023 முதல் அகவிலைப்படியை 34 விழுக்காட்டிலிருந்து. 38 விழுக்காடாக உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், சுமார் 10,000 திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.

அதேபோல் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் முழுநேரம், பகுதிநேரம். தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் ரூ.2.000/- ஆக வழங்கப்பட்டு வந்த பொங்கல் கருணைக்கொடை இவ்வாண்டில் ரூ.3,000/- ஆக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புகள் திருக்கோயில் பணியாளர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதோடு, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அவர்தம் குடும்பத்தாரோடு உற்சாகமாக கொண்டாடிட வழிவகை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.