Connect with us

மேகதாதுவில் அணை கட்ட விரைந்து அனுமதி வழங்குக !! கர்நாடகா முதல்வர் வேண்டுகோள்..

megatha

தமிழகம்

மேகதாதுவில் அணை கட்ட விரைந்து அனுமதி வழங்குக !! கர்நாடகா முதல்வர் வேண்டுகோள்..

மேகதாதுவில் அணை கட்ட விரைந்து அனுமதி வழங்குக !! கர்நாடகா முதல்வர் வேண்டுகோள்..

மேகதாதுவில் அணை கட்ட விரைந்து அனுமதி வழங்குக வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கர்நாடகா முதலமைச்சர் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மார்ச் 18ஆம் தேதி கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட பட்ஜெட் ஒதுக்கப்பட்ட நிலையில் அம்மாநில முதல்வர் மேகதாது அணை திட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் பெருவோம் என கூறியிருந்தார்.

இந்நிலையில் கர்நாடகா முதல்வர் பசுவராஜ் பொம்மை இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில் அங்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து  மேகதாதுவில் அணை கட்ட விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக  கூறப்படுகிறது.

மேலும் அப்பர் கிருஷ்ணா ஆதரவு திட்டம் உள்ளிட்டவைகளை ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே இன்று காலை மத்திய வனதுறை அமைச்சரை கர்நாடக முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை சந்தித்து பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top