Connect with us

மதுரை மேலூர் கிரானைட் குவாரி முறைகேடு வழக்கு: பிஆர் பழனிசாமி விடுதலை ரத்து

News

மதுரை மேலூர் கிரானைட் குவாரி முறைகேடு வழக்கு: பிஆர் பழனிசாமி விடுதலை ரத்து

மதுரை மேலூர் கிரானைட் குவாரி முறைகேடு வழக்கில் கிரானைட் குவாரி உரிமையாளர் பிஆர் பழனிசாமி விடுதலை ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிஆர் பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுதலை செய்த மேலூர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டு சற்றுமுன் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

மதுரையில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்துக் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து பி.ஆர். பழனிச்சாமி விடுவிக்கப்படுவதாக கடந்த 2016ஆம் ஆண்டு மேலூர் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. கிரானைட் முறைகேடு தொடர்பான 2 வழக்குகளில் இருந்து பி.ஆர். பழனிச்சாமியை விடுவித்து உத்தரவிட்ட மேலூர் நீதிபதி, ஏற்கனவே, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியால் இரண்டு முறை கண்டிக்கப்பட்டவர் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு இன்று வெளியான நிலையில் மதுரை மேலூர் கிரானைட் குவாரி முறைகேடு வழக்கில் கிரானைட் குவாரி உரிமையாளர் பிஆர் பழனிசாமி விடுதலை ரத்து செய்யப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top