சுதந்திர இந்தியாவிற்கு முன்பு நம் நாட்டில் அதிக அளவு பெண்களுக்கு எதிரான அநீதி நடைபெற்றது. குறிப்பாக பெண் சிசுக்கொலை என்பது ஒவ்வொரு கிராமத்திலும் அதிகமாகவே காணப்பட்டது.
அதன் பின்னர் மெல்ல மெல்ல குறைந்து பின்னர் பெண் சிசுக் கொலை செய்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். இவை தற்போது நடைபெறுவது பலருக்கு வேதனை அளிப்பதாக காணப்படுகிறது.
அதன்படி 6 மாத குழந்தையை கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டுக்கோட்டை அருகே 6 மாத குழந்தை நீரில் மூழ்கடித்து கொலை செய்த வழக்கில் மூதாட்டி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மல்லிப்பட்டினத்தில் மீன் தொட்டியில் ஆறு மாத குழந்தை இறந்து கிடந்தது. போலீசார் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கணவர் உடல் நலம் பெற வேண்டி பாட்டியே 6 மாத பேத்தியை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
இதற்காக குறி சொல்லிய முகமது சலீம், பாட்டி சர்மிளா அவரது கணவர் அசாருதீன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷர்மிளா பேகம் திருச்சி மத்திய சிறையிலும், அசாருதீன், முகமது சலீம் ஆகியோர் பாவநாசம் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.