Connect with us

கர்நாடக முன்னாள் முதலமைச்சரின் பேத்தி தூக்குப் போட்டு தற்கொலை.. இதுதான் காரணமா?

Untitled 131

செய்திகள்

கர்நாடக முன்னாள் முதலமைச்சரின் பேத்தி தூக்குப் போட்டு தற்கொலை.. இதுதான் காரணமா?

கர்நாடக முன்னாள் முதலமைச்சரின் பேத்தி தூக்குப் போட்டு தற்கொலை.. இதுதான் காரணமா?

நேற்று கர்நாடக முன்னாள் முதலமைச்சரான எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த சம்பவம் அரங்கேறி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் பெயர் பத்மா, பத்மாவிற்கு சௌந்தர்யா என்ற மகள் உள்ளார்.

சௌந்தர்யா டாக்டர் படிப்பினை முடித்துவிட்டு பெங்களூரில் உள்ள எம்எஸ் ராமையா மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.

மேலும் சௌந்தர்யா 2019 ஆம் ஆண்டு தான் பணியாற்றும்  எம்எஸ் ராமையா மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி மருத்துவர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார்.

சௌந்தர்யாவிற்கு 6 மாத குழந்தை உள்ளது.  இந்தநிலையில் சௌந்தர்யா நேற்று அவரது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும் உடலைப் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இந்த செய்தி கர்நாடகாவில் பரபரப்பினை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குத் தொடர்ந்து விசாரணையும் செய்து வருகின்றனர்.

சௌந்தர்யாவுக்கு அவரது கணவருக்கும் 6 மாத காலமாகவே பிரச்சினைகள் இருந்து வந்ததாகவும், அதனால் சௌந்தர்யா மனமுடைந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

6 மாதக் கைக் குழந்தை இருக்கும்போது இப்படி ஒரு முடிவை சௌந்தர்யா எடுத்துவிட்டாரே என்று பொதுமக்களும் புலம்பி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top