News
கிராண்ட் வெஸ்டன் டிராக் ரோடு பெயர் மை வைத்து அழிப்பு!
தமிழகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக பாடுபட்டவர் ஈவேரா. இவர் தந்தை பெரியார் என்றும் அழைக்கப்பட்டார். மேலும் இவர் கேரளாவில் நடைபெற்ற வைக்கம் என்ற போராட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் குரல் கொடுத்தேன் காரணமாக இவர் வைக்கம் வீரர் என்றும் அழைக்கப்பட்டார். சாதி மறுப்பு திருமணங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னை ரிப்பன் மாளிகை அருகே உள்ள நெடுஞ்சாலையில் தந்தை பெரியார் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது அவரது பெயர் இன்று காலை நீக்கப்பட்டதால் பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் அவர் பெயர் நீக்கப்பட்டு கிராண்ட் வெஸ்டன் டிராக் ரோடு என்று பெயரிடப்பட்ட இதற்கு பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தற்போது கிராண்ட் வெஸ்டன் டிராக் ரோடு பெயரானது அளிக்கப்பட்டதாக தகவல் மேலும் பெரியார் விடுபட்டது கண்டித்து திராவிடர் விடுதலை கழகத்தினர் பெயரை கருப்பு மை பூசி அளித்தனர்.
மேலும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பெயர் மாற்றத்திற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் உரிய பதிவினை வெளியிட்டு இருந்தார். மேலும் அவர் பெரியார் ஈவெரா நெடுஞ்சாலை பெயரை கிராண்ட் வெஸ்டன் டிராக் ரோடு என்று மாற்றியதற்கு கண்டனமும் தெரிவித்திருந்தார் . மேலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் இதற்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறினார். மேலும் சென்னை ரிப்பன் மாளிகை அருகே பெரியார் ஈவேரா பெயரை மாற்றிக்கண்டனமும் தெரிவித்திருந்தார் . 1979ல் பெரியார் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட போது பூவிருந்தவல்லி சாலைக்கு பெரியார் பெயர் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழகத்தில் உள்ள பல பகுதியினரும் இது குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர் வெளியிட்டு வருகின்றனர்
