பட்டப்பகலில் கள்ளக்காதலியுடன் உல்லாசம்..! நேரில் பார்த்ததால் விபரீதம்.. பின்னணி என்ன ?

தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை நகரிலுள்ள உள்ள ஒரு பெண்ணின் அலறல் சத்தம் அக்னி வெயிலையே அலற வைத்தது. வீட்டுக்குள் குடும்பமே சேர்ந்த இளம்பெண் ஒருவரை தாறுமாறாக தாக்கியுள்ளனர்.

மற்றொரு பக்கம் பெண் ஒருவர் இளைஞரின் கண்ணம் சிவக்க கைகளினால் அர்ச்சனை செய்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு வந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் அந்த கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் இந்த கொலைவெறி தாக்குதல் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் பானு பிரகாஷ். இவரது மனைவி சத்தியா.

இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற போது 9 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், 20 லட்சம் ரொக்கத்தை வரதட்சனையாக வழங்கியுள்ளனர். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த சூழலில் குடும்பத்தகராறு காரணமாக சத்தியாவிடம் விவாகரத்து கேட்டு உள்ளார் பானுபிரக்காஷ். ஆனால் மனைவியோ விவாகரத்து தர முடியாது என கூறி உள்ளார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் இருந்து வருகிறது.

இதனையே பானுபிரகாஷ் கடந்த த இரண்டு வருடங்களாக தன்னுடைய  குழந்தைகளின் செலவுக்கு கூட பணம் கொடுக்காமல் தனது மனைவிக்கு கொடுத்த வரதட்சனை ரொக்கத்தையும் எடுத்துக்கொண்டு தனியாக வசித்து வந்துள்ளார்.

அப்போது  அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அறிந்த மனைவி பானு பிரகாஷ் வீட்டிற்கு உறவினர்களோடு சென்றுள்ளார். அப்போது அவர்கள் பட்டப்பகலில் உல்லாசமாக இருந்ததை பார்த்த  அவரது  மனைவி மற்றும்  உறவினர்கள் பானுபிரகாஷ் , கள்ளக்காதலியை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment