தென்னாப்ரிக்காவில் தோன்றி இன்று உலகில் உள்ள பல நாடுகளில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி கொண்டு வேகமாக பரவுகிறது ஒமைக்ரான். ஒமைக்ரான் இந்தியாவிலும் மெல்ல மெல்ல பரவத் தொடங்கி உள்ளதாக காணப்படுகிறது.
குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்த ஒமைக்ரான் நோயின் பரவல் அதிகமாக காணப்படுகிறது. ஒமைக்ரான் பரவல் காரணமாக மும்பையில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது கர்நாடகாவில் மேலும் ஒருவருக்கு இந்த ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஏற்கனவே இரண்டு பேருக்கு இந்த ஒமைக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.
இதனால் கர்நாடகாவில் ஒமைக்ரான் பரவலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.தென்னாப்பிரிக்காவிலிருந்து கர்நாடக திரும்பிய 34 வயது நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே கொரோனா தொற்றின் தாக்கம் ஏற்ற இறக்கமாக உள்ளது மக்களுக்கு பெரும் சோகத்தை உருவாக்கி வரும் நிலையில் ஒமைக்ரான் பரவலும் மெல்ல மெல்ல உயர்ந்து வருவது வருத்தத்தை அளிப்பதாக காணப்படுகிறது