Connect with us

படிப்படியாக பள்ளிகளை திறக்கலாம்: மத்திய அரசுக்கு எய்ம்ஸ் இயக்குனர் பரிந்துரை

News

படிப்படியாக பள்ளிகளை திறக்கலாம்: மத்திய அரசுக்கு எய்ம்ஸ் இயக்குனர் பரிந்துரை

a0d2b713cd264c3c68cce6e8a30984f1

நாடு முழுவதும் படிபடியாக பள்ளிகளை திறக்கலாம் என இயக்குனர் மத்திய அரசுக்கு தனது பரிந்துரையை எய்ம்ஸ் இயக்குனர் செய்துள்ளார். 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் திறக்க வில்லை என்பதும் இதனால் மாணவர்கள் ஆன்லைனில் மட்டுமே பாடம் படித்து வருவதால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது நாடு முழுவதும் குறைந்துள்ளதை அடுத்து பள்ளிகளை திறக்க என எய்ம்ஸ் இயக்குனர் ரந்திப் குலேரியா அவர்கள் பரிந்துரை செய்துள்ளார். இந்த பரிந்துரையை ஏற்று விரைவில் மத்திய அரசு பள்ளிகளை திறக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்துமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் தவிர கிட்டத்தட்ட அனைத்தும் திறக்கப்பட்டதால் மாணவர்களின் கல்வி மற்றும் நலனை கருத்தில் கொண்டு படிப்படியாக பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஏற்கனவே சமூக ஆர்வலர்கள் ஆசிரியர்கள் சங்கம் தனியார் ஆசிரியர்கள் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top