பிக் பாஸ் வீட்டில் மாஸாக எண்டரி கொடுத்த ஜி பி முத்து ! வைரலாக புகைப்படம்!

முன்னணி சின்னத்திரை தொலைக்காட்சியான விஜய் டிவியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் தமிழ் பதிப்பு இன்று தனது ஆறாவது சீசனை தொடங்கியுள்ளது.

மேலும் நிகழ்ச்சியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.பிக் பாஸ் தமிழ் 6 இன் தொடக்க எபிசோட் விஜய் டிவியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பப்படும் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்திலும் ஸ்ட்ரீம் செய்யக் கிடைக்கும்.

ஆறாவது பதிப்பில் 24 மணிநேர நேரடி ஊட்டம் இருக்கும், எடிட் செய்யப்பட்ட ஒரு மணிநேர பதிப்பு விஜய் டிவியில் வார நாட்களில் இரவு 10 மணி முதல் 11 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் ஒளிபரப்பப்படும்.

இந்நிலையில் முதல் போட்டியாளராக டிக்டாக் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் ஜி.பி.முத்து களமிறங்கியுள்ளார். இவரின் செத்த பயலே.. நாரப்பயலே என்ற வார்த்தை மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இவர் சொந்தமாக யூ டியூப் சேனல் தொடங்கி பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவர் சேனலுக்கு சுமார் 9 லட்சத்திற்கும் மேல் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

ரசிகர்களை வேட்டையாட அழைக்கும் கமல்! வைரலாகும் பிக்பாஸ் வீடியோ!

தற்போது பிக் பாஸ் வீட்டிற்க்குள் வந்துள்ளார் என்ன நடக்கபோகுது என ரசிகர்கள் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கமலுக்கு சம்பளமாக சுமார் 75 கோடி பேசப்பட்டு இருக்கிறதாக தகவல்கள் வெளி வருகின்றன. பிக் பாஸ் வீட்டுக்கு செல்லும் போட்டியாளர்கள் குறித்து அதிகார பூர்வ தகவல் அடுத்தடுத்து வெளியாகிவந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment