சிம்புவுடன் பத்து தல திரைப்படத்தில் இணையும் முக்கிய இயக்குநர்!!!

சிம்பு நடிக்கும் பத்து தல திரைப்படத்தில் பிரபல இயக்குநர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன். உடல் எடையை குறைத்து இவர் நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. இதை தொடர்ந்து மாநாடு, பத்து தல உள்ளிட்ட திரைப்படங்களில் சிம்பு பிசியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் சிம்பு நடிக்கும் பத்து தல படம் குறித்து செம தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள். 

கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்த மஃப்டி படத்தின் ரீமேக்கான இதில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி ஷங்கர், கலையரசன், டீஜே உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கிருஷ்ணா இயக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. 

வின்னை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட திரைப்படங்களை கௌதம் மேனன் இயக்கினார். தற்போது நடிப்பிலும் சக்கை போடு போட்டு வரும் இவர், சிம்பு நடிக்கும் படத்தில் இணைந்திருப்பது எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.