வேட்டையாடு விளையாடு 2 பத்தில் கெளதம் மேனம் கொடுத்த ஹாட் அப்டேட் !!!

கமல் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தப்படம் வேட்டையாடு விளையாடு. இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், கமலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி, ஜானகி சுபேஸ், முமைத் கான் ஆகியோர் நடித்த வேட்டையாடு விளையாடு 2 விரைவில் வரப்போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து, ரவிவர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். குற்றவாளிகளை தேடி அமெரிக்கா போகும் கமல், அங்கு ஒரு காதல் என விறுவிறுப்பாக தொடங்கும் காட்சிகளாக அமைந்துள்ளது. இந்தநிலையில் கமல்ஹாசனின் நடிப்பான் அது அனைவரையும் கவர்ந்தது.

இதன் காரணமாக வேட்டையாடு விளையாடு 2 எப்போது வெளியாகும் என இயக்குனர் கெளதம் மேனனிடம் ரசிகர்கள் கேட்டுவந்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக சமீபத்தில் மீடியா ஒன்றிற்கு பேட்டியில் வேட்டையாடு விளையாடு 2 படத்திற்காக 120 பக்கத்திற்கு கதை தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

அதோடு படத்தின் சூட்டிங் வேலைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஆனால் மீண்டும் கமல் சார் இதில் நடிப்பாரா என்று தெரியவில்லை என கூறியுள்ளார்.

ஏற்கனவே கமல் நடித்த வேட்டையாடு விளையாடு படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்திருக்கும் நிலையில் இத்தகைய அப்டேட் ஆனது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment