அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற முதல்வர் உத்தரவு இட வேண்டும்- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கோரிக்கை

இந்தியாவில் கொரோனா தொற்று ஒரு பக்கம் பரவி வருகிறது. உருமாறிய ஓமிக்ரான் ஒரு பக்கம் பரவி வருகிறது.

இருப்பினும் தனியார் கம்பெனிகள் சில தங்களது ஊழியர்களை ஒர்க் ப்ரம் ஹோம் என்று வீட்டில் இருந்தே வேலை பார்க்க சொல்லியுள்ளது.

அதன்படி அரசு ஊழியர்களையும் வீட்டில் இருந்தே பார்க்க சொல்லும்படி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு இட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஒரு நாளைக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தினால் அரசு ஊழியர்களை கொரோனா தொற்று பாதிப்பது கணிசமாக தடுக்கப்படும்.

எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து ஒன்றிய அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகைள தமிழக அரசு ஊழியர்களுக்கும் நீட்டிக்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு ஓபிஎஸ் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment